டேவிட்  கிரிகோரி (david Gregory FRS, 3 June 1659 – 10 October 1708) என்பவர் ஒரு ஸ்காட்டிஷ் கணிதமேதை மற்றும் வானவியலாளர். இவரது மருமகன் ஜேம்ஸ் கிரிகொரிதான் ஒளி பிரதிபலிக்கும் தொலைநோக்கியை அமைத்தவர். அதனால் அது கிரிகோரியன் தொலைநோக்கி (Gregorian telescope) என்றே அழைக்கப்படுகிறது. 17ம் நூற்றாண்டின் சிறந்த கணித மேதைகளுள் டேவிட்  கிரிகோரியும் ஒருவர். இவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர். ஆக்ஸ்போர்ட் பல்கலையின் வானவியல் பேராசிரியர். மேலும் ஐசக் நியூட்டனின் ப்ரின்சிபியாவை விமரிசனம் செய்தவர். டேவிட் கிரிகோரி ஒரு மருத்துவரின் 4வது குழந்தை. அபர்டீனிலுள்ள இலக்கணப் பள்ளிக்கும், பிறகு மரிஷால் கல்லூரிக்கும் சென்று படித்தார். 

கிரிகோரி தன் 16வது வயதிலேய உலகம் முழுவதும் சுற்றினார். நெதர்லாந்துக்குப் போகும்போது, அங்கேயே லேயடேன் பல்கலையில் ( Leiden University) மருத்துவம் பயின்றார். அவர் உலகம் முழுவதும் சுற்றியபோது கணிதம், இயற்பியல் மற்றும் வானவியல் பயின்றார். மேலும் Descartes, Hudde and Fermat போன்றோரின் கண்டுபிடிப்புகளைப் படித்தார். தன் 24 வது வயதில், எடின்பரோ பல்கலையின் கணிதப் பேராசிரியராக பணி அமர்த்தப்பட்டார். கிரிகோரி, ஜார்ஜ் ஜேம்சன் (George Jameson) என்ற ஓவியரின் மகளான எலிசபெத் ஒலிபண்டை (Elizabeth Oliphant) மணந்தார். இந்த தம்பதியருக்கு 9 குழந்தைகள் பிறந்தாலும், 7 வயிற்றிலேயே இறந்து பிறந்தது.

ஸ்காட்லாந்தில் பெரும் அமைதியின்மை உண்டானதால், கிரிகோரி இங்கிலாந்து செல்ல முடிவு எடுத்தார். அங்கு 1691ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தப் பணி விஞ்ஞானி ஐசக் நியூட்டனின் சிபாரிசால் கிடைத்தது. அதே ஆண்டு கிரிகோரி, ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும், 1693ல் பாலியோல் (Balliol College, Oxford.) கல்லூரியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1707ல் ஸ்காட்லாந்தின் நாணய தொழிற்சாலையை சீரமைப்பு செய்யும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நியூட்டனின் ஒளி பிரதிபலிக்கும் தொலைநோக்கிக்கும், பாயில் விதிக்கும் சரியான படங்கள் வரைந்து கொடுத்தார். 1702ல் கிரிகோரி Astronomiae physicae et geometricae elementa என்ற நியூட்டனின் புகழ் பெற்ற கருதுகோள்களை வெளியிட்டார். 

கிரிகோரிதான் நியூட்டனின் ஈர்ப்புவிசை கொள்கையுடன், வானவியலை முதன் முதல் தன் விரிவுரையிலும் தனது முதல் புத்தகத்திலும் தெரிவித்தவர். மேலும், கணிதம் மூலம் கொள்கைரீதியான வானவியல், அதன் வளைவுகள், கிரகணங்கள், இடமாறு தோற்றப்பிழை மற்றும் வால் மீன் பார்க்க காசீனியன் மாதிரி போன்வற்றைக் காண்பித்தார்.

1708ல் அலுவல் ரீதியாகப் பயணிக்கும்போது, அவர் உடல்நலக் குறைவால் இறப்பைத் தழுவினார்.

Pin It