இப்போது வாட்ஸ் அப்பில் பரவிக்கொண்டிருக்கும் செய்தி இது முக்கியமாக பாஜக நண்பர்கள் சிலர் பகிர்ந்தது. ...

“அன்பான பெற்றோரே....நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உங்கள் அருமை மகள்களை கோவை போராட்டக்களத்திற்கு அனுப்பி வைத்திருந்தீர்கள். உங்களது இந்தச் சமூக அக்கறைக்குச் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அதே சமயத்தில் போராட்டக்களத்தில் நடந்த ஒரு சம்பவத்தைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வரக்கடமைப்பட்டுள்ளோம்.

போராட்டத்தின் குழுவினோரோடு கலந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள், போராட்டத்தில் பங்கு பெற்ற உங்கள் வீட்டு பெண்களிடம், போராட்ட ஒருங்கிணைப்புக்கு என்று கூறி செல்போன் நெம்பர்களை வாங்கினர். இதன் மூலம் அந்த இளைஞர்கள் உங்கள் வீட்டுப் பெண்களை அடிக்கடி தொடர்பு கொள்வார்கள். உங்கள் பெண்களின் மனதை மாற்றுவார்கள்.

அதன்பின்னர் உங்கள் வீட்டுப்பெண், உங்கள் கையை விட்டு போவதை நீங்கள் எவ்வளவு முயன்றாலும் முடியாது. நீங்கள் அவமானத்தில் கூனிக்குறுகுவதைத் தவிர வேறுவழியில்லை. உங்கள் பெண்ணை அழைத்து சென்றவனும் அவளை குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாக மட்டுமே பயன்படுத்துவான்.

எனவே உங்கள் செல்ல மகள்கள் பயன்படுத்தி வரும் செல்போன் எண்களை உடனடியாக மாற்றிவிடுங்கள். இது யாரையும் குறை கூறுவதற்கான பதிவு அல்ல. வருமுன் காப்பதற்காக போடப்பட்ட பதிவு! உண்மையை உணர்ந்தவர்கள், உரியவர்களுக்கு பகிருங்கள்!”

உங்கள் பிள்ளைகளை இவ்வளவு கேவலப்படுத்த உங்களால் மட்டுமே முடியும்.... தூக்கிக் குப்பையில் போடுங்கள் உங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்....

ஜல்லிக்கட்டுப் போட்டியில் தான் ஜாதி என்று பார்த்தால், கெரகம் புடிச்சவனுக ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் ஜாதியையும் மதத்தையும் நுழைக்கறானுக.... இளைஞர் சமுகமே உங்களை கேவலப்படுத்தும் இந்துப்பண்பாடு, கலாச்சாரங்களைத் தூக்கியெறியுங்கள்!

Pin It