நூல் வெளியீட்டு அரங்கம்
2011  நவம்பர் 12 சனிக்கிழமை மாலை 4.30 மணி

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணாசாலை, சென்னை.

இடதுசாரி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், களப்பணியாளர், இலத்தீன் அமெரிக்க அரசியல் விமர்சகர் ரான் ரைடனவர் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு

TAMIL NATION IN SRI LANKA
SOUNDS OF VENEZUELA
வெனிசுவேலாவின் ஓசைகள்

***

வரவேற்புரை: தோழர் சரவணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அறிமுகவுரை: அமரந்த்தா
நூல் வெளியீட்டு அரங்கு துவக்கம்: ஆ.கந்தசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

***

TAMIL NATION IN SRI LANKA

5.30 நூல் வெளியீடு
தோழர் தா. பாண்டியன்
தமிழ் மாநிலத் தலைவர்
இந்திய பொதுவுடைமைக் கட்சி.

5.45 நூல் விம‌ர்ச‌ன‌ம்
தோழர் விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்
பெரியார் திராவிடர் கழகம்.

***

SOUNDS OF VENEZUELA

6.10 நூல் வெளியீடு தோழர் ஆர். நல்லக்கண்ணு
தலைவர், மத்திய கட்டுப்பாட்டுக்குழு
இந்திய பொதுவுடைமைக் கட்சி.

6.25 நூல் விமர்சனம்
தோழர் தியாகு
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

***
வெனிசுவேலாவின் ஓசைகள்

6.40 நூல் வெளியீடு
தோழர் சி. மகேந்திரன்
தமிழ் மாநில துணைப் பொதுச்செயலாளர் இந்திய பொதுவுடைமைக் கட்சி.

6.55 நூல் விமர்சனம்
தோழர் பா. செயப்பிரகாசம்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு.

***

7.10 நூலாசிரியர் ரான் ரைடனவர் அறிமுகம்: அமரந்த்தா
7.25 நூலாசிரியர், தோழர்களுக்குச் சிறப்புச் செய்தல்
7.40 தோழர் ரான் ரைடனவர் உரை
மொழிபெயர்ப்பு தோழர் தியாகு
8.45 நன்றியுரை: எஸ்.சண்முகநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நூலாசிரியர் தோழர் ரான் ரைடனவர்...

வட அமெரிக்காவில் 1939 ஆம் ஆண்டு பிறந்த ரான் ரைடனவர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். மாவீரர் சே கெவாராவின் கொள்கைகளைப் பின்பற்றுபவர். இலத்தின் அமெரிக்க நாடுகளின் மக்கள் விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பவர். கூபப் புரட்சியினால் உந்தப்பட்டு, செயல் வீரராக, ஊடகவியலாளராக, மொழிபெயர்ப்பாளராக எளிய மக்களோடு இணைந்து தொடர்ச்சியாக நாற்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 1982 முதல் 1984 வரை நிகாரகுவாவில் சாந்தினிஸ்தா புரட்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டார். கூப பண்பாட்டு அமைச்சக அழைப்பின் பேரில் கூபாவில் 1988 முதல் 1996 வரை எட்டு ஆண்டுகள் எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கூபப் புரட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அரசினால் அழைக்கப்பட்ட மிகச் சில எழுத்தாளர்களில் ரானும் ஒருவர். கூபா குறித்து நான்கு நூல்களை எழுதியுள்ளார்.

கூபாவில் கடும் பொருளாதார நெருக்கடி காலத்தில் தன்னார்வ விவசாயப் பணியாளராக இருந்த ரானின் அனுபவங்கள் 'கூபா: செயல்படும் புரட்சி' என்ற பெயரில் சென்ற ஆண்டு NCBH பதிப்பகத்தால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுது ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கான தமது ஆதரவை "TAMIL NATION IN SRI LANKA" என்ற பெயரில் எழுதியுள்ளார்.

இந்த நூல்கள்...

ரான் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மூன்று மாத காலம் வெனிசுவேலாவில் தங்கியிருந்து பொலிவாரியப் புரட்சி பற்றிய செய்திகளை "SOUNDS OF VENEZULA" என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இதனை "வெனிசுவேலாவின் ஓசைகள்' என்ற தலைப்பில் தமிழில் இப்பொழுது NCBH பதிப்பகம் வெளியிடுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் நான்காம் கட்ட ஈழப் போர் முடிவடைந்து 2009 மே 27 அன்று ஐ.நா. மனித உரிமைகள் கழகத்தில் கூபா உள்பட 29 நாடுகள் இலங்கை அரசிற்கு ஆதரவாக வாக்களித்து போர்க் குற்ற விசாரணை நடைபெறவிடாமல் தடுத்தன. இது சர்வதேசியத்தின் மீதும், சோசியலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த தமிழ்நாட்டு முற்போக்காளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கூபா உள்ளிட்ட ஆல்பா நாடுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம் (தமிழ்நாடு) இலத்தீன் அமெரிக்க ஆதரவு இடதுசாரி சரக்கு கடிதம் எழுதியது. இக்கடிதம் கண்டு ரான் ரைடனவர் கூபா, நிகாராகுவா, பொலிவியா உள்ளிட்ட ஆல்பா நாடுகள் இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலைக்கு ஆதரவு அளித்ததை மிக வன்மையாகக் கண்டித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து ஐந்து கட்டுரைகளை எழுதினார். அதில், இலங்கை தொடர்பான கூபாவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். சே கெவாராவின் சர்வதேசியக் கொள்கையைப் பின்பற்றும் அனைவரும் ஒடுக்கப்படும் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது கடமை என்று விட்டதாக அறிவிக்கப்பட்டது. வலியுறுத்துகிறார். இவர் இவரது கட்டுரைகளின் வாயிலாக இலங்கையில் நடந்தது தமிழ் இனப்படுகொலையே என்ற உண்மை பரவலாகி மேற்குலகிலும் இலத்தின் அமெரிக்காவிலும் முற்போக்களர்களிடையே ஈழ விடுதலைப் போர் குறித்த விவாதம் எழுந்தது. இவற்றின் தொகுப்பாகவே "TAMIL NATION IN SRI LANKA" என்ற நூல் இப்பொழுது வெளிவருகிறது.

***

நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கும்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்
தோழர் ரான் ரைடனவர்

Pin It