டாலர் அரசியல் முதல் பகுதியில் டாலரின் மதிப்பு எவ்வாறு உலக சந்தையில் நிலை நிறுத்த பட்டுள்ளது என்றும்
இரண்டாவது பகுதியில் மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா தன் வளர்ச்சியை மேம்படுத்த செய்ய வேண்டியன என்ன என்றும் பார்த்தோம்.இந்த பதிவில் உலக அளவில் மாறி வரும் பொருளாதார சூழ்நிலை பற்றியும் அதன் விளைவு பற்றியும் பார்ப்போம்
சென்ற நூற்றாண்டின் இறுதி வரை உலகில் அதிக அளவு நிதி சேமித்து வைத்து அதை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பன சேம நல நிதி நிறுவங்கள்(Pension fund), மியூட்சுவல் பண்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.இந்த பணத்தில் பெரும் பங்கு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் நிறுவனங்களின் கையில் தான் இருந்தது.இந்த நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிதிகளின் மதிப்பு மிக அதிக அளவில் இருந்ததால், உலக அளவில் நடைபெறும் மிக முக்கிய பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு(பங்கு வர்த்தக முதலீடுகள், பெரிய நிறுவங்களை வாங்குவது மற்றும் இணைப்பது,புதிய கம்பெனிகளை துவங்குவது மற்றும் பத்திர வர்த்தகம் etc) முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்.சுருங்க சொல்ல வேண்டும் என்றால் இவை பொருளாதார அதிகார மையங்களாக செயல்பட்டன.
ஆனால் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெட்ரோல் விலை உயர்வாலும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தாலும் இந்த நிலை சிறிது சிறிதாக மாற தொடங்கி உள்ளது.பெட்ரோலை டாலரில் விற்பதன் மூலம் அமெரிக்கா அடையும் நன்மையை டாலர் அரசியல் என்ற பதிவில் பார்த்தோம்.மறுபுறம் பெட்ரோல் விலை உயர்வால் அரபு நாடுகள் மற்றும் அங்கு உள்ள ஆட்சியளர்களின் சொத்து மற்றும் டாலர் கையிருப்பு பல மடங்காக உயர தொடங்கியது.ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பெருக்கத்தால், சில நாடுகளின் டாலர் கையிருப்பு அதிகரித்தது. உலக மயமாக்களாலும் (globalization) முதலாளித்துவ வளர்ச்சியாளும் ஒரு சிலரின் தனிபட்ட சொத்து உலகின் சில நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியை தாண்டி விட்டது.இதன் விளைவாக புதிய அதிகார மையங்கள் உலகில் உருவாக தொடங்கி உள்ளது.அத்தகைய பொருளாதார மையங்களில் சில
1.பெட்ரோல் மூலம் அதிக வருமானம் குவிக்கும் பெட்ரோடாலர் சொத்துகள்
2.ஆசிய மத்திய வங்கிகள்
3.Hedge funds
4.தனிபட்ட தனியார் முதலீடுகள்
நிதி நிர்வகிக்கும் அமைப்புகள் | 2006 ம் ஆண்டு மதிப்பு $ட்ரில்லியன் | 2000-2006 வளர்ச்சி விகிதம்% | 2012(எதிர்பார்ப்பது) $ட்ரில்லியன்* |
பென்சன் Fund | 21.6 | 5 | 29 |
மியூச்சிவல் Fund | 19.3 | 8 | 31.2 |
காப்பீட்டு நிறுவனங்கள் | 18.5 | 11 | 33.8 |
பெட்ரோடாலர் முதலீடுகள் | 3.8 | 19 | 5.9 |
ஆசிய மத்திய வங்கிகள் | 3.1 | 20 | 5.1 |
Hedge Funds | 1.5 | 20 | 3.5 |
தனியார் முதலீடுகள் | 0.7 | 14 | 1.4 |
*-கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $50 என கணக்கிடபட்டது | |||
ஆதாரம்-McKinsey |
மேற்கண்ட அட்டவனை உலக பொருளாதார அதிகார மையங்களின் அளவையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.அதில் கீழேயுள்ள நான்கு பிரிவின் மொத்த மதிப்பு 8- 9 ட்ரில்லியன் டாலர்கள்.இந்த மதிப்பு மொத்த தொகையை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் 2000- 2006 ஆண்டு வரை உள்ள அதன் வளர்ச்சி விகிதத்தை பார்த்தால் ஒரு உண்மை புரியும்.பெட்ரோடாலர் சொத்துக்களின் மதிப்பின் வளர்ச்சி 19 சதமாகவும் ஆசிய வங்கிகளின் கையிருப்பு 20 சதமாகவும் pension பண்டின் வளர்ச்சி 20 சத்மாகவும் உள்ளது.உலகிள் உள்ள 10 மிகப்பெரிய நிறுவன்ங்களில் 6 நிறுவனங்கள் ஆசிய மற்றும் அரபு எண்ணெய் நிறுவனங்கள்.ஒரு சில எண்ணெய் நிறுவங்களின் மதிப்பு ஜெனரல் எலெக்ட்ரிக்கள்,மைக்ரோசாப்ட், சிட்டி குரூப் போன்ற நிறுவனங்களை விட அதிகம்.மேற்கூறிய நான்கு பிரிவுகளில் முக்கிய இடத்தை வகிப்பது அரபு நாடுகளின் பணமும், ஆசிய வங்கிகளின் பணமும் தான்.Hedge Fund மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களில் பெரும்பான்மையான முதலீடு செய்துள்ளதும் மத்திய ஆசிய நிறுவங்களும் அரபு நாட்டு செல்வந்தர்களும் தான்.
இந்த புதிய பொருளாதார அதிகார மையங்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.இவை அமெரிக்க பன்னாட்டு நிறுவங்களின் (Multi national) பெரும் பங்கை வாங்க தொடங்கி உள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க நிதி நெருக்கடியினால், பல நிறுவங்களின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. மேலும் பெரும்பாலான நிறுவனங்களின் கையிருப்பு பணம்(liquidity) மிக வேகமாக குறைந்து வருவதால், அதிக பணம் கொண்ட இந்த நிறுவனங்களின் சேவை மற்ற நிறுவனஙக்ளுக்கு தேவையாக உள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் காரணாமாக இந்நிறுவனங்கள் வாங்கியிள்ள பங்குகளின் மதிப்பு குறைந்து சிறிது நட்டத்தில் தெரிந்தாலும், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையும் போது அதன் மதிப்பு பல மடங்கு வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையாக விளங்கும் பல நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் இவை பிற்காலத்தில் அமெரிக்க அரசியல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தற்போதைய நிதி நெருக்கடி காரணாமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல அழிந்துள்ளதால், இந்நிறுவனங்கள் முதலீடு செய்து காப்பாற்றி உள்ள நிறுவனங்கள் Monopoly யாக வளர்ந்து பல மடங்கு லாபத்தை அள்ளி தர வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம்-கிரடிட் சூயிச்,லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்,மெரில் லின்ச்,AMD,பார்க்லே,பெராரி,டைம் வார்னர்,ஸ்டாண்டர்டு சார்ட்டட்,டைச் வங்கி,UBS,மோர்கன் ஸ்டான்லி,சிட்டி குரூப் etc. உலகில் நடக்கும் மிகப்பெரிய நிறுவங்களின் இணைப்பு மற்றும் வாங்குதலுக்கும் இந்த நிறுவங்களே நிதியுதவி செய்கின்றனர்.2007ம் ஆண்டு மட்டும் இதன் மொத்த மதிப்பு $4.5 டிரில்லியன் டாலரை தாண்டி விட்டது.இதன் மூலம் மிகப்பெரிய நிறுவங்களில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடிகிறது. தற்போது அமெரிக்க Real Estate மிகவும் வீழ்ந்துள்ளது.இந்நேரத்தில் இந்நிறுவனங்கள் அமெரிக்க சொத்துகளை குறைவான விலையில் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இந்நிறுவங்கள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள தாது வளங்களில் மற்றும் விவசாய அபிவிருத்தி போன்றவற்றில் முதலீடு செய்து தனது எதிர்கால தேவைகளுக்கும், எதிர்காலத்தில் உலகளாவிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செய்யவும் உறுதி படுத்த தொடங்கி உள்ளனர்.இத்தகைய செயல் இதுநாள் வரை மேலைநாடுகள் மட்டுமே பின்பற்றும் அணுகு முறையாக இருந்தது.
தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், இந்நாடுகள் பெட்ரோல் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்ற முயற்ச்சிப்பதும் இக்காரணங்களுக்காதான். தற்போதைய நிறுவனங்களின் நெருக்கடியின் மூல காரணமே பண கையிறுப்பு குறைவு தான். எனவே இது போன்ற நெருக்கடியான காரணங்களில் கிடைக்கும் ஒவ்வொரு டாலரும் பிற்காலத்தில் நூற்றுகணக்கான டாலரை சம்பாதித்து கொடுக்கும் வல்லமை படைத்தன. உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் இவை வகிக்கும் பங்கு வரும் காலத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
பொதுவாக அமெரிக்காவின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியாக கருத படும். அமெரிக்காவும் அரசியல்,பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான உதவிகளை மறைமுகமாக அந்நிறுவனங்களுக்கு வழங்கும். இனி அந்நிறுவங்களில் பெருமளவில் முதலாளித்துவ கொள்கை இல்லாத கீழை மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் நிறுவனங்கள் பங்குகளை வாங்கி விட்டால் அமெரிக்க அரசின் பார்வை எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது போல, அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நாடுகளும் அவற்றை வர்த்தக ரீதியாக மட்டும் தான் அணுகுமா? என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்
- சதுக்கபூதம், (