காலம் 38  வெளியீடு

இந்தக் கவிதைகள் ஈழப் பெண்களின் போராட்ட வாழ்வில் மிகப்பெரும் ஆவண மதிப்பைக் கொண்டிருக்கிறது என்பதனை எவரும் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். கவிதைகளின் தொகுப்பாளர்கள் தமது தொகுப்புரையில் இதனைத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் : 

ஓரு பெட்டைக்கு இந்தச் சமூகம் எப்போதும்போலக் கீறி வைத்திருக்கும், வழமையான,சலிப்பான வாழக்கைப் பாதையின் வரைபடத்தைப் பொருட்படுத்தாது, இந்தப் பெண்கள் சாகச மனத்தோடு பயணித்து, வெளிச்சத்துணுக்ககள் நிறைந்த பல பத்துப் புதிய வழிகளை எமக்காகச் செப்பனிட்டுத் தந்திருக்கிறார்கள். இன்று நம் தமிழ் சமூகத்தில் பெண்களின் சாகசம் (adventure) குறித்துப் பேசப்படவில்லை. சாகசங்களுக்கு என எந்த ஒரு இடமுமில்லை. நமது சராசரி தமிழ்க் குடும்பங்களிலிருந்து இளம்பெண்கள் வருடக்கணக்கில், மேற்படிப்பு, வேலை, திருமணம் போன்ற காரணைங்களைத் தவிர்த்து, வீட்டுத் தொடர்புகளற்று, வீட்டைத் துறந்து போவது என்பது சாதாரணமான நிகழ்வல்ல. தமிழ்ப் பெண்ணின் வரலாற்றில் இவர்கள் அம்மைல்கல்லை அடைந்திருக்கிறார்கள். அத்தோடு அதை நமக்காக ஆவணப்படுத்தியும் இருக்கிறார்கள்.  

செயலுக்கும் சொற்களுக்கும் இடையிலான போராட்டத்தில் இந்தப் பெண் போராளிகள் மரணித்த தமது தோழனின் புன்னகையை நினைவு கூர்கிறார்கள், காதலனை நினைவுகூர்கிறார்கள், மழலை இன்பத்தை நினைவு கூர்கிறார்கள், விட்டு வந்த அன்னையின் அன்பை நினைவு கூர்கிறார்கள், அமைதியான கடல்பரப்பில் புதையுண்ட தமது சகபோராளிகளை நினைவுகூர்கிறார்கள், உயிர் வாழ்தலின் மேலான தமது தீராத வேட்கையை வெளியிடுகிறார்கதாம் நேசித்த மக்களுக்காகப் போராடி மடிதல் எனும் இந்த மனநிலையை நாம் முக்தி என்றோ விடுதலை என்றோ கடவுள்நிலை எய்துதல் என்றோ எப்படியும் பெயரிட்டுக் கொள்ளலாம். இந்த ஆன்ம தரிசனத்தில் கெரில்லாக்களிடம் ஆண் பெண்ணென்னும் பேதம் கடந்த மானுடஈடேற்றம் எனும் ஓருணர்வை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. 

-யமுனா ராஜேந்திரன்

இட‌ம்:  Mid Scarborough Community Centre , 2467 Eglinton Av East , Scarborough
நாள்: 13 November 2011  |  நேரம்: 4.30 PM to 8.30  |  தொடர்புக்கு: 416 731 1752

Pin It