காலையில் டீ கடையில பேப்பரை பார்த்துவிட்டு "அய்யைய்யோ..." அப்படீன்னு புரட்சி பண்றவங்களையெல்லாம் விட்டுறலாம். பாவம் பேப்பர் காரன் சொல்லைலைன்னா அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. ஆனால், இந்த முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதுவும் தெரியாது என்றால், அது பொய்; ஏமாற்று. ஏனென்றால், இந்த கட்சிகள் அனைத்தும் அதிகாரவர்க்கம் அனைத்திலும் தமக்கான ஆட்களைக் கொண்டிருப்பவைதான்.

thiruppur guna book on dec5ஓ.கே. மேட்டருக்கு வருவோம். இந்த கட்சிகளெல்லாம் இப்போது இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஒரு தர்ம யுத்தம் நடப்பதாக நம்புகின்றனவா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது (இப்போது தி.மு.க உள்ளிட்ட இந்தியா முழுவதுமான கட்சிகள் மீதும் நடத்தப்படுகிற) எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரானதா? அல்லது ஆளும்வர்க்கங்களுக்கிடையிலான அரசியல் சதுரங்கமா?

பி.ஜெ.பி அதிகாரத்திற்கு வந்தபிறகு எப்படி ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்?

இந்துத்துவ கட்சியான பி.ஜெ.பி-க்கும் அ.இ.அ.தி.முக-வுக்கும் என்ன கொள்கை மோதல்?

சுதேசி பொருளாதாரம் பேசிக்கொண்டிருந்த பி.ஜெ.பி-யை கார்ப்பரேட்டுகள் எப்படி நம்பி ஆட்சிக்கு கொண்டுவந்தன?

ஆட்சிக்கு வந்தபின் பி.ஜெ.பி மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகள் அதன் கொள்கையின் அடிப்படையிலானதா?

மாநில கட்சிகளை ஒழித்து கட்டுகிற பி.ஜெ.பி-யின் நடவடிக்கைகள் அதன் கட்சி நலனுக்கானதா? கார்ப்பரேட்டுகள் நலனுக்கானதா?

மாநில கட்சிகள் நசுக்கப்பட்டப் பிறகு, குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிற பொருளாதார நடவடிக்கைகளை எப்படி பார்ப்பது?

நிதி ஆயோக், செயலகத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் துறை அதிகாரிகளை நியமித்தல் முதலாக இந்திய அதிகாரத்தன்மையில் ஏற்படுத்துகிற மாற்றங்கள் வெறும் நிர்வாக சீர்த்திருத்தமா? அல்லது இந்திய அதிகார கட்டமைப்பு மாற்றியமைக்கப் படுகிறதா?

இந்த மாற்றங்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் உறவு இருக்கிறதா?

இந்த மாற்றங்கள் ஏற்படுத்தத் தடையாக இருந்த மாநிலக் கட்சிகள்தான் குறிவைத்து நசுக்கப் படுகின்றனவா?

அந்த வகையில்தான் அ.இ.அ.தி.முக-வும் ஜெயலலிதாவும் நசுக்கப்பட்டார்களா?

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிற பொருளாதார நடவடிக்கைகள் அதை உறுதிபடுத்துகிறதா? இல்லையா?

உறுதிபடுத்துகிறது என்றால், ஜெயலலிதாவின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா?

பிறகு ஏன் அதை சாதாரணமாக அல்ல, சட்டை செய்யாமலே கடந்து போகின்றன கட்சிகள்?

ஒரு கட்சி ஒழிந்து போகட்டும் என்ற போட்டி அரசியலா? அல்லது தமக்கு இதனால் என்ன நட்டம் என்ற அலட்சியமா?

ஏதோ ஒருவகையில் நடக்கிற நேர்மையில்லாத, சூழ்ச்சித்தனமான அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கிற நீங்கள் எப்படி மக்களின் மீதான தாக்குதலை எதிர்கொள்வீர்கள்?

அது சாத்தியமே இல்லை என்பதைத்தானே இன்றைக்கு தமிழகத்தில் நடக்கிற அடக்குமுறைகள் நிரூபிக்கின்றன?

என்பதுதாங்க இந்த புத்தகம். “2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள்” தோழர் திருப்பூர் குணா எழுதியிருப்பது. அவசியமானது; அதிர்ச்சிகளை உருவாக்கக் கூடியது; கொஞ்சம் பேருக்கு வயித்தெரிச்சலையும்தான்.

வெளியீடு: பொன்னுலகம் புத்தக நிலையம்

4?413, பாரதி நகர், 3-ஆவது வீதி,

பிச்சம்பாளையம் (அஞ்சல்), திருப்பூர் – 641 603

பேச: 94866 41586

பக்கம்: 64

விலை: 60 ரூபாய்.

Pin It