சொல்வதைச்
சொல்லும் கிளி என்றதும்
எல்லோரும்
ஏதேதோ கூற
அதுவும்
திருப்பிக் கூறிக்கொண்டிருந்தது
பைத்தியமாய்...

என் திருப்பம் வர 
அருகில் சென்றேன்
சக்கரநாற்காலியை நகர்த்திக்கொண்டே...
அழுகை வர
கிளியும்
அழ ஆரம்பித்திருந்தது!!

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.