நினைவுகள் பாய்மரம் விரிக்க ....

நங்௯ரமிட்டது தொலைந்து போன கனவுகள்

முன்னும் பின்னுமாய்

ஊஞ்சலாடியபடி

உள் வாங்குது எண்ண அலைகள் ....

 

அது ஒரு நிலாக்காலம் .....

உன் மூச்சை  சுவாசித்த காலம் ....

கடிகார முள்ளாய் சேர்ந்தும் பிரிந்தும்

பகா பதமாய் தனித்து பொருள்படாமல்

இருந்த வசந்த காலம் .....

 

பயணங்கள் பட்டயம் எழுதிவிட்டு

பதுவிசாய் பதுங்க

மீண்டும்....

பழையன கழியாமல் ....

புதியன சேர்ந்தபடி!!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.