மழை நீர் பட்டுத்தெறித்து

பளபளக்கும்

prema_asweetdreambythelmaஇலைகளின் பசுமையையொத்த

உன் மென் சிரிப்பில்

பூத்திருக்கிறது

எனக்கான ஒற்றைச்சொல்

 

செவ்விதழ் மறைத்துப்போராடும்

உன் வெண் முத்துப்பரல்கள்

வார்த்தைகளை பூச்சரமாய்

உன் பாதத்தில் கிடத்துகிறது

 

தனிமை குறித்தான

நீல மேகக்களைப்பில்

தளர்ச்சியான சொற்கள்

உன் குவளைக்கண் ஒத்தடத்தில்

சரிந்து வீழ்கிறது

பாதி மயக்கத்தில்

 

உன்னைக்கடந்து போகும்

போதெல்லாம்

உன் காலடிச்சொற்கள்

பட்டாம் பூச்சிகளாக உருமாறி

நிறம் வளர்க்கப்போராடுகிறது

என்னைச்சுற்றி

 

என் கண்களிலிருந்து

வழியும் நிறங்களும்

வான வில்லினை பா¢கசிக்க

மனம் முழுவதும்

மீண்டுமொரு குழந்தையின்

பண்டிகைக்கால மகிழ்ச்சி

 

இளம் வயதினிலேயே

கணவனுடன் நிறங்களை இழந்து

முதல் முதலாக

ஊர்த்திருவிழ காண வரப்போகும்

உன்னிடம் என் காதலைத்தொ¢விக்க

சேகரித்துக்கொண்டிருக்கிறேன்

ஒரு கோடி நிறங்களை

உனக்காக மட்டுமே

 

-பிரேம பிரபாஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.