இது எனக்கு புதிய இடம்
முதல் முறையாய்
வருகிறேன் இப்பொழுது

 

எனக்குப் பெரிதான
ஒரு சட்டையை
கழட்டி வைக்க வந்திருக்கிறேன்

 

பெரிய சட்டைகளை
பத்திரமாய் பார்த்துக் கொள்ளும்
பெரிய இடம் இது

 

உபயோகமில்லாத பல
பெரிய சட்டைகளால்
நிறைந்திருந்தது அந்த இடம்

 

என்னைப் பெற்ற பெரிய
சட்டையினை அங்கே
கழற்றி வைத்து வெளி நடக்கையில்
அவ்விட முகவரியை
அக்கறையாய் குறித்துக் கொண்டது
எனக்குப் பிறந்த குட்டி சட்டை

- லதாமகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.