தெர்மாக்கோலில்
வீடு கட்டி விளையாடும்
குழந்தைகள்
சந்தோஷமாகவே இருக்கின்றனர்
தெர்மாக்கோலின்
மதிப்பு தெரியாதவரை.
o
விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையை அதட்டும்
பெரியவர்களின் உணர்வை
பொறாமையென மொழிபெயர்க்கிறது
குழந்தை.
o
திறமையை மெச்சி
பாரி வள்ளல்கள்கள் அளிக்கும்
ஒற்றை ரூபாயில்
நடக்க முடியாமல்
தடுமாறி விழுகிறது
ஒற்றைக்கயிற்றின் நடப்பவர்களின்  வாழ்க்கை.
o
வருத்தத்தில் இருக்கிறது
பூக்களைக் கசக்கும்
குழந்தைக்கு
எட்டாத உயரத்தில் இருக்கும்
பூ.
 
- லதாமகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.