பேசும் கிளி பொம்மையொன்றுParrot
வந்திறங்கியது வீட்டில்.
'
சீக்கிரம் வா படி
சாப்பிடு சீக்கிரம்'
என்ற மனைவியின்
எல்லா அழைப்புகளையும்
எதிரொலித்துக் கொண்டிருந்தது கிளி.
தனக்கு வேலை
சற்று குறைந்ததென
குதூகலித்துக் கொண்டிருந்தாள்
மனைவி.
எங்களுக்குத்தான்
எல்லாமும்
இரண்டு மூன்று முறை
எதிரொலித்தபடி.

- செல்வராஜ் ஜெகதீசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.