
வார்த்தைகளுக்கு வண்ணமிட்டு
கண்களுக்கு ஒளியேற்றி
உடம்பெல்லாம் உற்சாகமூற்றி
இதழ்களில் இனிமை சேர்த்து
வேறொருவனாகி
வந்து நிற்கின்றேன் உன்முன்.
ஆனால் உன்
பளிங்கு முகத்தில்
நிர்வாணமாகி
நிறம் கலைந்து
வெறுமையாய் வீடு திரும்புகிறேன்.
- புத்தொளி (

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.