Ammanவைகாசி அஞ்சியானால்
பஜனை கோயிலிலிருந்து
தொடங்கிவிடும்
சிரசு ஊர்வலம்.

சின்னப்பையன்
தலையில் அமர்ந்து
ஒவ்வொரு வாசலிலும்
ஆடிக்கொண்டே நிற்பாள்
கங்கையம்மா.

ஆட்டக்காரிக்கு
கற்பூரமோ தேங்காயோ
கடாவோ
பலியிடுவதில்தான்
பூரிப்பு நிறைந்திருக்கிறது
அவரவர்களுக்கு.

ரத்தம் உறிஞ்சிய சிவப்பாய்
உதட்டோடு
பல்லைக் காட்டி
சிரித்தவளாய்
ஆடுகிற ஆட்டத்தில்
சொக்க வைத்துவிடுவாள்
இளவட்டங்களை.

குடித்துவிட்டு
காசியம்மாளை
அடித்துத் திரியும்
முருகேசன்தான்
காளியாத்தாள்
வேசங்கட்டி
சூலம் ஏந்தியவனாய்
ஊர் சுற்றி
ஆடி வருவான்.

புருசனை
"எழவெடுக்கோ' என்று
வசைமாரி பொழிகிற
பெண்களெல்லாம்
தாலிபாக்கியம் வேண்டி
தீச்சட்டி பிடித்து
ஆடுவார்கள் அம்மனுக்கு. 

சா. இலாகுபாரதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.