Manஎப்போதும்
சுகமாயிருப்பதில்லை
உட்கார்ந்திருத்தல்

எழுந்தால் போதும்
என்னுமளவு
சிரமமாகியும் போவதுண்டு

நின்று கொண்டிருப்பது கூட
நிறையவே சிரமமாய்
தெரிகிறது
இடம் கிடைக்காத
ஏமாற்றத்தில்

எழுந்து வழி விட்டவர்கள்
ஏமாளிகள் ஆவதுண்டு
உட்கார்வதற்கான
போட்டியே
வலிமையுணர்த்தும்
வழியென்றான பின்

உட்கார்ந்திருக்கும்
வரை தான்
உத்திரவாதம்
என்றுணராமல்
உட்கார்ந்திருப்பவரைக்
காட்டிலும்
உயர்வாகத் தெரிகிறது -
உட்கார்வது யாராயினும்
மாறாமல் உட்கார்ந்திருக்கும்
இருக்கைகள் 

க.ஆனந்த் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It