அமர்ந்தபடி
More articles by செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- கவிதையை முன்வைத்து... (13 ஏப் 2010)
- நாற்காலிகள்... (13 ஏப் 2010)
- பேச்சுத்துணை.... (13 ஏப் 2010)
- இன்று... (13 ஏப் 2010)
- பிறப்பு... (13 ஏப் 2010)
காலையில் கண்ட
வெண்புறா
திறந்த கதவுச்
சத்தத்தில்
தாவிப்போய்
தன் இருப்பிடமாய்
கொண்டது
இன்னொரு காரின்
இரு சக்கரங்களுக்கு
இடைப்பட்ட
இடமொன்றை.
அலுவலக வேலைகள்
அத்தனைக்கும் இடையில்
இன்னமும் சிறகடித்து மனதில்
இம்சையாய் அந்த வெண்புறா
இடம் மாறி
இருக்குமா - அந்த
இன்னொரு கார்
கிளம்பும் ஓசையிலும்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )