எல்லை தாண்டி என் வீட்டிற்குள்
நுழையும் செடியின் கிளை.
பக்கத்து வீட்டில்
வெட்டச் சொல்லி விட்டேன்.
இன்று அது பூத்திருந்தது!



நேற்று சிரித்தவை

அலுவலகத்தில் புதிதாய்
சேர்ந்த இளையவர்கள்
அற்ப விஷயமொன்றிற்கு
குதூகலித்து சிரித்த போது,
மெல்லிய புன்னகையோடு
அவர்களை
வேடிக்கை பார்த்த நிமிடம்
மீண்டும் உணர்த்தியது
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை!

வெண்மணிச் செல்வன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.