பெரும்பிரலளயம் என்னுள்
நாளைக்கான பிம்பங்கள்
விடாமல் துரத்துகின்றன
வெகுதூரம் வந்துவிட்டேன்
கடப்பதற்கான பாதைகள்
அத்தனையும் ஒவ்வொன்றாய்
சிதைத்துக்கொண்டு
சிதைவுகளையும் சேர்ந்தே
சுமந்துகொண்டு எனக்கான
ஆணியை ஏந்தியபடி
சிலுவையில் ஏறி
பெருங்குரலேடுத்து கத்துகிறேன்
எனது செவிச்சிறைக்குள்
இத்தனை நாள் புகாத அத்தனை
குரல்களும் அந்தப்பெருங்குரலில்
மோதித்தெறிக்கின்றன…
வெறுமை நிறைந்த அந்த வெளியில்
எனது ஒற்றைக்குரல் மட்டும்
காற்றின் போக்கை மறுதலித்து
ஓங்கி அழைக்கிறது என்னை
சிலுவையில் அறையப்போகிறவனை

ஒட்டக்கூத்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 
Pin It