eelam_motherGrowing up in the shadows of my father’s war
I never believed I would fight in a war of my own.

எனது தந்தையின் போர் நிழலில் வளர்ந்த நான்
எனக்கென்று ஓர் சொந்தப்போரில் பங்கேற்பேன்
என நம்பியதே இல்லை .

Growing up you heard
all the war tales of cold, hunger, and fear.

வளரும்போது,
போர்க்கதைகளைக் கேட்டீர்கள்
நடுங்கும் குளிரையும் வாட்டிவதைக்கும் பசிக்கொடுமையும்
மிரள வைக்கும் அச்சத்தையும் சொல்லிற்று அவை.

Growing up you saw
the look in their eyes as they told of battles.

வளரும்போது,
போர்களைப்பற்றி சொல்கையில் அவர்கள்
விழிகளில் நிழலாடிய மிரட்சியைப் பார்த்தீர்கள்


Growing up you saw
the look in their eyes as they told you of lost friends.

வளரும் போது,
இழந்து போன அவர்தம் நண்பர்கள் பற்றி சொல்கையில்
இமைவழி இழிந்த கண்ணீரைப் பார்த்தீர்கள்.

Growing up you heard
the catch in their voice as they fought back the tears.

வளரும் போது,
கண்ணீரைக் கட்டுப்படுத்த அவர்கள் முயல்கையில்
குரலின் தழதழப்பைக் கேட்டீர்கள்.

Growing up you witness
the dreams of battles being re-fought.

வளரும்போது,
போர் பற்றிய கனவுகள் மீண்டும் போராடி
மீட்டெடுக்கப்பட்டதற்கு சாட்சியமாக இருந்தீர்கள்.

Growing up you witness
some fathers who could not talk of these things.

வளரும்போது
இவை பற்றி எல்லாம் பேச முடியாமல் போன
சில தந்தையர்களையும் கண்டீர்கள்.

Growing up I said to myself
this will never happen to me.

வளரும்போது
இப்படி எல்லாம் நிகழாது என
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

eelam_warBut when I grew up
it did in a far off land call Vietnam.

நான் வளர்ந்து விட்ட போது
இப்படி எல்லாம் நிகழ்ந்ததைக் கண்டேன்
வியத்நாம் எனும் தூரதேசத்தில்.

Now my children see those looks in my eyes;
heard the tales of battles; the stories of lost friends;
and they see me re-fight the old battles
in my sleep and they hear the screams in my sleep.

இப்போது எனது குழந்தைகள்
நிகழ்ந்த போர்கள் பற்றிய கதைகளை
இழந்துபோன நண்பர்கள் கதைகளை
எனது விழிகளில் கண்டதனால்
தூக்கத்திலும் கூட பழைய போர்களை
மீண்டும் நான் நடத்துவதையும்
உறக்கத்திலும் கூட யுத்த முழக்கங்களை
நான் முழங்குவதையும் கேட்கின்றனர்.

Growing up I have become like my father
a man living with his own demons.

வளரும்போது
தனது கனவுகளிலும் விகளுடன் வாழும்
என் தந்தையைப்போலவே
கிவிட்டேன் நான்.


Growing up I become a man
who prays his child never has to live the hell of war.

வளரும்போது
தனது குழந்தை
போர் எனும் நரகத்தில்
ஒரு போதும் சிக்கிவிடக்கூடாது
என மன்றாடும்
மனிதனாகி விடுகிறேன் நான் !


Source: Poems by war veterans

மூலம்/தகவல் : வியத்நாமிய போராளிகளின் நினைவுகள்
தமிழாக்கம் : புதுவை ஞானம்

புதுவை ஞானம்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It