என் பிம்பம்
என்றுமில்லாத அளவில்
அதிக புன்னகையேந்தியிருக்கிறது
கண்ணாடிக் குடுவையினின்று
எட்டிப்பார்க்கும் ஊதாநிறப் பூக்கள்
கடைசியிதழ் வரையிலும்
மலர்ந்திருக்கின்றன
சுவரில் படர்ந்த அழகுக் கொடியில்
தலையாட்டிக்கொண்டிருக்கிறது
கிளையொன்றின் பிரியம்
அலமாரியின் புல்லாங்குழலின்
வழிந்தபடியிருக்கிறது நேசப் பாடலொன்று
திரைச்சீலையின் மெல்லிய அசைவுகளோடு
நீயும் நிலவும் உட்பிரவேசிக்கும் இப்பொழுதில்
உனையெழுதிய காகிதங்களின் படபடப்பில்
உயிர் பெறுகிறதென் காலம்!
- கோகுலன் (
நானும் காதலும் - 4
More articles by கோகுலன்
- நானும் காதலும் – 5 (15 ஏப் 2010)
- ராஜன் ராஜீயான க(வி)தை (15 ஏப் 2010)
- ஏகாந்தம் திருடிப்போனவள் (13 ஏப் 2010)
- நானும் காதலும் - 3 (13 ஏப் 2010)
- நானும் காதலும் - 2 (13 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.