அடி வானத்தில்
தொங்கிய அந்தியை
அசைத்துக் கொண்டிருந்தது இரவு.
அச்சம் கொண்ட பறவைகள்
அலறியபடி சென்றன.
விவரமறியாமல்
விரண்டோடி வந்த காற்றை
மரங்களும் செடிகளும்
தலை தாழ்த்தி தடுத்தன.
யாவையும்
அறிந்த இரவு
அந்தியைச் செமித்து
அமைதியானது.
எட்டிப் பார்த்த
நிலவை
எவரும் கண்டுகொள்ளவே இல்லை.
யாவருக்கும்
இன்பம் கொடுக்கும்
இரவு வேலைகளின்
ஆசைகள் மிகைத்ததால்
அவரவர்கள்
அவரவர்களுக்கானதைச் செய்தார்கள்.
இரவு
விழித்துக் கொண்டு இருந்தது
பகலை அண்டவிடாமல்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.