அவர்கள்
காரணம் சொன்னார்கள்.
அதனை
எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அவர்கள் அதன் பிறகும்
காரணம் சொன்னார்கள்.
அதனையும்
அவர்கள் ஏற்றார்கள்.
கைப் புண்ணைக் காண
கண்ணாடி கேட்கும் உலகில்
நீதிப் புத்தகங்களில்
நியாயங்களை சலிக்காமல்
தேடியலையும் உங்களோடு
கொஞ்சமல்ல
நிறையவே
தூரப்பட்டுக் கிடக்கிறேன்
பேதமெனும்
நீச நிறக் குருடற்று
நானிருப்பதால்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.