அவநம்பிக்கை
என் மீது
பிரயோகிகப்பட்டதே இல்லை
பழிச் சொல்
என் நெற்றியில்
பட்டயம் சுமந்ததே இல்லை
குற்றங்குறை கூட
கோபம் கொண்டவனிலேயே
அடங்கிப் போயிருக்கிறது
இக்கணம் கொண்டவனுக்கு
இதயங்கள் அதிகம் என்று
என்னைக் கொண்ட
எல்லோருக்கும் புரிந்து விடுகிறது
என்னை மறுத்தவர்கள்
இல்லை என்றே சொல்லலாம்
என் வாழ்வில் இதுவரை
தேவதைகளே
துணைக்கிருக்கிறார்கள்
விட்டு விலகுதல் கூட
மொட்டு மலர்தல் போல
நடந்து விடுகிறது
நதியில் மிதக்கும் இலை போல நான்
நதி என் காதலிகள்
- கவிஜி