பஸ்சில்
வழியனுப்பினால்
அருகில்தான் என்ற நம்பிக்கை.

காரில்
வழியனுப்பினால்
உடன் சென்றது போல் தோன்றும்.

விமானத்தில்
வழியனுப்பினால்
பெருமிதம் கலந்த தூரம்.

ரயிலில்
வழியனுப்பினால்
நீளும் பாதையும்,
கை அசைவுகளும்,
மெதுவாகக் குறையும் முகமும்,
இதயத்தில் நிரந்தர சோகமாய் நீள்கிறது!

ரயிலில் செல்லப் பிடிக்கும்,
ஆனால்
ரயிலில் அனுப்பப் பிடிப்பதில்லை…

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.