rain paintings 450மழை வந்ததும் ஜன்னல் திறக்கிறாய்
படபடவென எழும்புகிறது
வாசலில் உன் வாசனை

*
கண் கண்ணாடி
தலைக்கு ஏறி இருக்கிறது
கண்காட்டு வித்தையா இது

*
சற்று பெரிய நெற்றி தான் உனக்கு
அதனால் என்ன
ரெண்டு முத்தம் சேர்த்து தரலாம்

*
புருவம் திருத்த வந்ததாய் சொன்னாய்
எனக்குத் தெரியும்
என் பருவம் மலர்த்த வந்த கதை

*
டவுனுக்குத் தான் சென்றிருக்கிறாய்
பவுனைத் தொலைத்த
வெறும் பெட்டியாகிறேன்

*
காதோரம் விழும் முடியை
ஒதுக்காதே விடு
கூந்தல் குறும்பு அது

*
மை தீட்டிய பிறகு
எங்கிருந்து வருகிறது
வெட்கம் கூடவே சிற்பம்

*
நீ சென்ற பிறகு
உன்னைத் தொலைத்த
கூட்டம் தானே திருவிழாவில்

*
ஆத்தங்கரைக்கு அழகு கூடுகிறது
வேறென்ன
நீ ஊர் வந்த சேதிதான் அது

*
பாட்டையா முணுமுணுக்கிறாய்
நேற்று தந்த
முத்தத்தை அல்லவா

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.