அறுத்து  விடுவார்கள். 

நாளை  காலை   
இரண்டு  மணி  வாக்கில்  
 
அதோ  அந்த  பெரிய  
 
ரக்கட்டைகளின்
  
மையத்தில்  வைத்து.  

காலை  கருக்கலில்  
சில்லென்று  நீர்  அடித்து
 
மடி நசுக்கப்போவதில்லை  இனி  

அறுத்து   விடுவார்கள்  

அவர்களுக்கு  வேண்டியதை   
அளவுக்கு  அதிகமாகவே  
 
கொடுத்துவிட்டேன்    

இன்னும்  கொஞ்சம் கொடுத்திருக்கலாம்  
கன்றுக்கென்று;   

சொல்லவும்  இல்லை  அவளிடம்

நான் இங்கு வருவதையும்  

அவள் இங்கு வரப்போவதையும்..

அழுதுவிடுவாள் அவள். 

வண்டியில்  ஏற்றுகையில்   
ஏதோ  மாட்டி
  
அறுபட்ட  வலி  
 
இருக்கப்போவதில்லை  
 
நாளை  காலை  

அறுத்து  விடுவார்கள்  
 
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.