பேய்களைப் பற்றிய
அச்சங்களை
ஒதுக்கி விட்டு
மனிதர்களைப் பற்றிய
அச்சங்களை
ஏற்றி வைக்கிறது காலம்.
குழந்தைகள் தொடங்கி
பெரியவர்கள் வரை
எச்சரிக்கையோடு பார்க்கும் விழிகள்,
புன்னகையைப் பார்க்கும் போது
சற்று தளர்ந்து போகிறது...
இப்போது தொடங்குகிறது
தனித்து விடப்பட்ட
வாழ்வினில் பேரிருள்!

- மு.முபாரக்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.