இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லையென
நினைக்கும் போது மழை வருகிறது
மழையில் விடுவதற்கென
சிறுவன் தயாரித்த
காகிதக் கப்பல் வருகிறது
யாரெனத் தெரியாத ஒருவனுக்கு
நனையாமலிருக்க குடையொன்றை
நீட்டுகிறது ஒரு கை
இப்போது இந்த வாழ்க்கை
பிடிக்கவில்லையென
சொல்ல நினைத்த வார்த்தைகளை
இழுத்துச் சொல்கிறது காகிதக்கப்பல்...
குடையொன்றை வாங்க
கடைநோக்கிப் பயணிக்கிறேன்
ஏதோ ஒரு குடையின் துணையோடு...
இந்த வாழ்க்கையைப்
பிடிக்கவில்லையென்பதை
பிடிக்காமல் செய்து விடுகிறது
ஒரு மழை!

- மு.முபாரக்

Pin It