பிரதி செய்வதாயில்லை
கபடமில்லா சிரிப்பை
நினைத்ததும்
சிலிர்க்கும் காதலை
கனிந்து குழைந்த பொழுதை
முன்நெற்றி முத்தத்தை
துரத்துகிற வாழ்வை
தூக்கியலைகிற துயரை
முதலரும்பிய காமத்தை
கிளர்த்திய களிப்பை
துளிர்த்த கண்ணீரை
ஒரு கல் மிகுதியாக சேர்க்கப்பட்ட துக்கத்தை
போலவே உன்னையும்...
உன்னைத் தொடருகிற என்னையும்...
ஒருபோதும்
பிரதி செய்வதற்கில்லை.

- இசைமலர்

Pin It