முன்பு போல் இல்லை
எங்களால் நினைத்த நேரத்தில்
பேசிக் கொள்ள முடியும்
முத்தமிட வழி இருக்கிறது
கொஞ்சி குலாவிட செவ்வக பூமி
ஜன்னல் வைத்திருக்கிறது
படுத்தபடியே பார்க்க
ஓரம் கவிழ்ந்தபடியே சிரிக்க
ஒருவர் பார்க்க ஒருவர் தூங்க
என எல்லாமும் நிகழ்த்த
வாய்த்திருக்கிறோம்
முகம் ஏந்தி விழி நோக்கி
காதோரம் ரகசியம் பேசவும்
வழி உண்டு
ஒளி வழியே நுழைந்து
உடல் சேரும் நாளுக்கு மட்டும் தான்
காத்திருப்பு
அதுவும் நிகழும்
வாட்சப் கடவுள் ஆசீர்வதிக்கிறார்
அதுவரை
வயதாகாமல் இருக்கத்தான்
நம் வேண்டுதலும்....!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.