ஊருக்கு வந்து சேர்ந்த பின்னும்
எனக்குள் இருக்கும் ஊர்
இன்னும் வந்து சேரவே இல்லை.
என்னைத் தேடிக்கொண்டு
வழி தெரியாமல் எங்கே நிற்கிறதோ?
தொலையாமல் என்னிடம் வந்து சேருமா என் ஊர்?
யாவற்றயும் வேறோடு வீழ்த்தி
லாரிகளில் ஏற்றி
பெருவணிகப் பிணவறைக்குள்
துண்டு துண்டாய்
துண்டாக்கி விற்றுத் தீர்ந்த பின்
நிலங்களைச் சுமந்து கொண்டு
ஸ்மார்ட் சிட்டி குப்பைக் குன்றுகளில்
ஞெகிழிகள் தின்று
பெரும்பாலங்கள் அடியில்
வயிறு வீங்கி நுரைதள்ளி
மனம் பிறழ்ந்தவராகி அசை
போட்டபடி நிற்குமோ
கண்டால்
என் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.