யானையின் நினைவுகளில்
காடழிந்து
மெல்ல மெல்ல
ஒரு கோயிலும்
நேரந் தவறாமல் கிடைக்கும் சோற்றுருண்டையும்
சீழில் நனைந்த சங்கிலியும் வாழ்வாவதன் துயரத்தை
நானறியத் தொடங்குகிறேன்
பார்த்துக் கடக்க மட்டும்
பயன்படும்
உன் தொடர்பு எண்ணில்.
- ந.சிவநேசன்
பிணை
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ந.சிவநேசன்
- உபசரிப்பின் ருசி (27 டிச 2021)
- மெல்லிய கவிதையின் இதழ் (08 அக் 2021)
- போன்சாய் எல்லைகள் (13 ஆக 2021)
- தனிமையின் இசை (14 ஜூன் 2021)
- இரவல் சொற்கள் (18 மே 2021)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.