பள்ளி நாட்கள் முடியும்வரை
எமக்கறியாது பிறந்தநாள்
ஒன்று இருப்பதென்று

ஒவ்வொரு ஆண்டும்
பல்லை இளித்துக் கொண்டு
கூறியது சமூக வலைத்தளம்
பிறந்தநாள் வாழ்த்து.

கால் நூற்றாண்டுகள் வரை
யாமறிந்த எவரும்
எம்மை வாழ்த்தியதில்லை

சமூக வலைத்தளத்தில்
ஆண்டுதோறும் வாழ்த்துகிறான்
முகம்காணாத நண்பன்.

காதலி ஒருமுறை கேட்டாள்
பிறந்தநாள் எப்போது

அம்மாவின் கணக்குப்படி ஒன்று
ஒன்றாம் வகுப்பில் சேர வேறொன்று
எதைச் சொல்ல காதலியிடம்

பள்ளி நாட்கள் முடியும்வரை
எமக்கறியாது பிறந்தநாள்
ஒன்று இருப்பதென்று

ஒவ்வொரு ஆண்டும்
பல்லை இளித்துக் கொண்டு
கூறியது சமூக வலைத்தளம்
பிறந்தநாள் வாழ்த்து.

கால் நூற்றாண்டுகள் வரை
யாமறிந்த எவரும்
எம்மை வாழ்தியதில்லை

சமூக வலைத்தளத்தில்
ஆண்டுதோறும் வாழ்த்துகிறான்
முகம்காணாத நண்பன்
பிறந்தநாள் வாழ்த்து.

காதலி ஒருமுறை கேட்டாள்
இரகசியமாக
பிறந்தநாள் எப்போது

அம்மாவின் கணக்குப்படி ஒன்று
ஒன்றாம் வகுப்பில் சேர வேறொன்று
எந்த இரகசியத்தை சொல்ல காதலியிடம்...

பிறக்கும் போதே பரிசுகளுடன்
பிறந்தார்களாம் புத்தரும் இயேசுவும்
எங்காவது படித்ததுண்டா
இவர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்
பிறந்தநாள் என...

- பாண்டி, பாஸ்டன்

 

Pin It