அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எம் குன்றுகளும் இருந்தன
எம் யானைகளும் இருந்தன
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
குவாரிகளும் அத்துமீறிய வேலிகளும்
களிறுகளின் ரத்தம் குடிக்கும் தண்டவாளங்களே நீள்கின்றன.
நம்பிக்கைகள் கொன்று வனங்களைத் தின்று.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.