தார்ப்பாய் ஓட்டைவழி
வழியும் பூத்தூறல்
குளியலில் சிரிக்கிறான்
நடைபாதை சிறுவன்...
தாயின் கதகதப்பில்
நடுக்கத்தை
குறைக்கிறது
குடைக்குள் குழந்தை..
தனக்கு மிகவும் பிடித்த
பர்ப்பிள் கவுனை
பாழாக்கியதாய்
பழி சொல்கிறாள்
பார்ட்டிக்கு வந்த சிறுமி..
மழை எல்லோருக்கும்
பெய்யென பெய்கிறது...

- அருணா சுப்ரமணியன்

Pin It