பற்றியெறியும் பெருங்காட்டுத் தீயென
தேகம்முழுக்க பரவியிருக்கும்
உன் நினைவுகள்...
விழிகளுக்குள் ஊடுருவிப்போன
தீப்பொறியின் முதல் தொடக்கம்...
உன்னுடனான நகர்தலில் நம்பிக்கையில்
அரவணைப்பில் பெருந்திரட்சியாய்
தீப்பிழம்பாய் நிலைகொண்டுள்ள
எனதிதயத்தை அணைத்துக்கொள்ள வா!
அணைந்து போகட்டும்
அத்துணை ஏக்கங்களும் தேவைகளும்....!

- வழக்கறிஞர் நீதிமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.