களைபிடுங்கிய
கையோடு
கஞ்சிக்காக காத்திருந்தாள்
அய்யம்ம்மா
மாறாத ஒற்றைவழியால்
மனங்கோணி
ஓட்டைவிழுந்த தாவணியை
உயர்த்திப்பிடித்தபடி
வந்தாள் மகள்
குடல் பிதுக்கி நின்ற
நெற்கதிர்கள்
அய்யம்மாவின் குடலை
நினைவுபடுத்திக்கொண்டிருந்தது
அடுத்த வேளைக்கு நீரில்லாமல்
அலுமினியச்செம்பில்
கடைசி சொட்டையும் விடாது
குடித்த
அய்யம்மாவின் அடுத்த வேளைக்கான
தாகம்
செம்பில் சேற்றுக்கை தடயமாய்
ஒட்டியிருந்தது
வயலின் வயிற்றைப் போல்...

- ஜெ.ஈழநிலவன்

Pin It