man face 264அவர்கள்
இரு கால்களையும்
ஆளுக்கொரு திசையில்
இழுத்தார்கள்...
பட்டென விடுவித்துக் கொண்ட
பட்டாம் பூச்சி
பறக்கத் தொடங்கியது...
பின் வெறும் குறியைப்
புணர்ந்தார்கள்....

-----------------

அதிகபட்சம்
அடுத்த பக்கம் வரை
நீளும்
கவிதைக்குள் தான்
என் மொத்த வாழ்வும்...

-----------------

காட்சியின் கண்களில்
கவிதைகள் பிழைகள்...
சொல்லிய கதைக்குள்
இடைவெளி தாகம்...
மென் மலைக் கதவுகளாய்
நான் இல்லாத,
மரணத்துள் நீயும் இருக்கலாம்...
மரணம் போல
புரியாமலே தொடராய்
தீண்டாமலே விடையாய்
நானும் நீயும் மற்றும்
இந்தக் கவிதையும்,
இருந்திருக்கலாம்.......

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.