manual scavengingமல்லிகையும்
ஒரே மணம் தான்
மலம் அள்ளும்
தொழிலாளிக்கு
_____________

வகுப்பறையில்
ஒரு தேவதையும்
கழிப்பறையில்
ஒரு சாத்தானும்
குடி கொண்டுள்ளன
அரசுப் பள்ளியில்
_____________

புழுதிக் காட்டின்
வெம்மையை
தலையில் வாங்கி
மேலாடை இன்றி
காலணிகள் இன்றி
ஓட்டிக் கொண்டேயிருந்தான்
பனங்காயில்
கிராமத்து ரயிலை

- ந.சுரேஷ், ஈரோடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.