தொடர்ந்து பிடித்து
கொண்டேயிருந்தார்கள்
மீனவர்கள்...
தொடர்ந்து பிடிபட்டு
கொண்டேயிருந்தன
மீன்கள்....

தொடர் போராட்டத்தில்
கொலை
செய்யப்பட்டுக்
கொண்டேயிருந்தது
வலை....

ஊமை சாட்சி கடல்...

இத்தனையையும்
வரைந்து
கொண்டிருந்த ஓவியன்
ஒரு நாள்
சுட்டு
கொல்லப்பட்டான்....

சுட்டவன்
அத்துமீறி ஓவியத்திற்குள்
நுழைந்த அடுத்த நாட்டு
காவல்காரன்....

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.