ஒரு கடனைப்போல்தான்
இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது
ஒரு கட்டாயத்தின் பேரில் தான்
இக்கவிதைக்கு தலைப்பு இடப்பட்டிருக்கிறது
இக்கவிதை உணர்த்தும் சேதி
வேண்டுமென்றே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது
இக்கவிதை பேசப்பட வேண்டுமென்பதற்காக
தன் இயல்பான மொழி மறந்து
வேறுமொழி பேச வைக்கப்பட்டிருக்கிறது
இக்கவிதை சுட்டும் இலக்கு
உங்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே
சுழற்றி வைக்கப்பட்டிருக்கிறது

- சேயோன் யாழ்வேந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.