rainbow 600

அம்மாம் பெரிய
மரத்தடியில்
கொஞ்சூண்டு இடம்
இல்லாமல் நகர்ந்து
கொண்டேயிருக்கிறது
வெயில்....
-------

கழுவி விழுந்த
நீர்த் துளிகளில்
உடைந்து கொட்டியது
முகம்...
-----

கிளை உடைய
தாவிய சிறகில்
இரண்டு இலைகளும்
ஒட்டிக் கொண்டன...
---

நிறங்களை அள்ளிப் போகும்
கரங்களின் நீட்சி
வானவில்....
--------

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.