yellowmanமதுவுக்கு பிந்தைய
என் கவிதைகளில்
ஒற்றைப் பனை மரம்
கடந்து
மஞ்சளுடையில்
சைக்கிளில் பயணிக்கும்
உனக்கு வயதாகவேயில்லை
என்பதுதான்
ஒவ்வொரு கவிதையின்
முடிவாகவும் இருக்கிறது....

திருப்பங்களில்லாத
பாதையாகிய புள்ளியாகி
நிற்கும் கால வர்ணங்களின்
தொலைவில்
தொலையவேயில்லை
எனக்கான உன் மஞ்சள் நிறம்...

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.