வலி
____
ஆற்றிலிருந்த
அத்துணை மணலையும்
துருவி ஒழித்தெடுத்த
ஓர் தினத்திற்குப் பின்னால்
அவர்கள் ஆற்று மணலை
என்ன சொல்லியழைப்பார்கள்?

புன்னகை
__________

வெம்மைப் பொழுதுகளில்
மேஜை நிரம்பிய
அலுவல்களில்
சக்கரம் கட்டிய
கால்களில்
இதமாய்
புன்னகைப்பவன் கூட
கடவுளாகத்தான் படுகிறான்.

- நிராசி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It