lady with tearsசற்று நேரத்திற்க்கெல்லாம்
நேர்த்தியாய் பொழிய காத்திருக்கும்
மழையோடு கலந்த மேகமாய்
நீயே எங்கும்
வியாப்பித்துக் கொள்(ல்)கிறாய்....

இருக்கும் இடத்திலேயே
உன் நினைவை கோர்க்கும்
அற்புத வரத்தின் தன்மையை
கண்டு நீயே அதிசயிக்கிறாய்....

உன்நிமித்தம் மாறுதலற்ற
பூரணத்துவத்தை எனதாக்கி
பின்பு உனதுமாக்கி
ரசிக்கிறாய்....

வார்த்தைகளற்ற
உன் மௌனம் எனை சுட்டே
எரிப்பதாய் சொல்லிய நீ தான்,
நேசித்தேன் என்பதையே பலமுறை
இல்லை என்கிறாய்....

குறைந்தபட்சம் உன்
விழிகளுக்கேனும்
தெரிந்திருக்க வேண்டும் - என்
இதழ்களில் அப்பியிருப்பது
கண்களில் வழிந்த
சிவப்பு தான் என.....

- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.