நான் தனிமையில் நடக்கிறேன், உண்மையை உன்னிடம் சொன்னால்
நான் தனிமையிலிருக்கிறேன்,
நீயும் தனிமையிலிருக்கிறாய் என என் இதயம் சொல்லும்போது
நானும் தனிமையிலிருக்க எனக்கு ஆட்சேபமில்லை.
நான் தனிமையில் நடக்கிறேன், அவர்கள் கேட்கிறார்கள் ஏனென்று,
அவர்களுக்கும் சொல்கிறேன் நான் தனிமையில் நடப்பதை.
கனவுகள் இருக்கின்றன நான் சேமிப்பதற்கு, நீ என்னை
அணைத்திருந்த இரவில் நம் மனம் திளைத்த கனவுகள்.
என் ஒவ்வொரு இறைவணக்கத்திலும்
எந்த இரவினில் நீ எங்கிருந்தாலும்
நானும் எப்பொழுதும் உன்னருகில் இருப்பேன்.
நீ அழைத்தால், நான் உன்னைக் கேட்பேன், நீ எங்கிருந்தாலும்.
உன் கண்களைச் சற்றே மூடு, நான் அங்கிருப்பேன்.
தயைசெய்து தனிமையில் நட, உன் காதலையும் முத்தங்களையும்
அனுப்பி என்னை வழிநடத்து.
நீ என்னருகில் நடக்கும் வரை, நான் தனிமையில் நடக்கிறேன்.
1944 ஆம் வருடத்தின் பிரபல பாடல்.
இயற்றியவர் - சாம்மி கான் (Sammy Cahn).
இசை - Jule Styne.
(தமிழாக்கம் - வ.க.கன்னியப்பன்)
நான் தனிமையில் நடக்கிறேன்
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: கவிதைகள்
More articles by வ.க.கன்னியப்பன்
- மரணத்தின் அணைப்பு - நிலைமண்டில ஆசிரியப்பா (22 ஏப் 2016)
- சொற்களை முறையாக எழுதுவது எப்படி? (03 நவ 2012)
- என் காதற்தலைவியின் கண்கள் கதிரவனைப் போலில்லை (11 மார் 2012)
- இனாமே, உன் மதிப்பு எவ்வளவு? (04 நவ 2011)
- யு.எஸ் விசா பெற தேவை நம்பிக்கையூட்டும் பதில்களே ! (17 செப் 2011)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.