சலிக்காத புன்னகையோடு
இடைவிடாத தொலைபேசி அழைப்புகளை பெறுகிறான்
பாடல்களை தொகுத்து வழங்கும்
ஜீன்ஸ் இளைஞன்.
 
அவரவர் காதல் அனுபவம் பற்றி 
தொலைபேசும் அனைவரிடமும் கேட்கபடுகிறது.
 
தன காதலன் பெயர் சொல்லி 
அறையே அதிரும்படி
காதல் எறிகிறாள் பெண்ணொருத்தி.
தொடரும் பாடல் அவர்கள் காதல் சின்னமாகிறது.
 
பின் வரும் பெண்ணிடமும்
காதல் குறித்து கேட்கப்படுகிறது.
"அய்யய்யோ... எனக்கு கல்யாணமாயிடுச்சு.." என்றபடி
அவசரமாய் மறுக்கிறாள் அப்பெண்
காதல் ஏதுமில்லையென. 
 
- சசிதரன் தேவேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.