கம்பளிப்போர்வையின்
More articles by பிரேம பிரபா
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - தந்தைக்குத் திதி கொடுத்த ஈசன் (01 ஜூலை 2022)
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - கட்டியக்காரன் (27 ஜூன் 2022)
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் (11 மார் 2022)
- நட்ட கல்லும் பேசுமோ?: 4. காவிரிக் கரையோரம் (17 பிப் 2020)
- நட்ட கல்லும் பேசுமோ?: 3. உப்பிலிக்கல் (04 செப் 2019)
கதகதப்பில்
ஜவ்வூடு பரவலென
மனதைதுளைத்து
கனவுகளை பதியம் போடும்
பனிக்காலம்
அழகான அட்டைக்குடிலில்
யேசுபிரான் பிறந்திருப்பார்
ஒவ்வொரு வீடுகளிலும்
அட்டைக்குடிலில்
அடர் பனிப் பொழியலை
ஞாபகப்படுத்தும்
இலவம் பஞ்சுகள்
வானத்தில் இருக்கும்
வால் நட்சத்திரம் வளர்த்திடும்
எல்லோரின் நம்பிக்கைகளையும்
தெய்வக்குழந்தையைக்
காண வந்த தூதுவர்களோடு
கொலுவிற்கு வாங்கிய
கிருஷ்ணனும் உடன் இருப்பார்
எங்கள் வீட்டு குடிலில் மட்டும்
- பிரேம பிரபா