உறவுகளுக்கு வணக்கம்,

தமிழர் இனப்படுகொலை நடந்த இடத்தில் இன்னும் குறுதிசுவடுகள் கூட காயாத இடத்தில் இந்தி திரையுலகினர் தமிழினப் படுகொலையை மறைத்து களியாட்டத்தில் மூழ்கிட திட்டமிடுகின்றனர். தமிழக இளைஞர்களின் சார்பாக நம் எதிர்ப்பை தெரிவிப்பது காலத்தின் கட்டாயம்.

இந்தித் திரையுலகினர் இலங்கையை ஆதரிப்பதை எதிர்த்து நடக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் திரையுலகினர் கவிஞர் தாமரை, இயக்குனர் இராம், இயக்குனர் கெளதமன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விருது வழங்கும் விழாவின் இடத்தை கொழும்பில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றக் கோரி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குழும உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேழம் உரு ( மே 8) | காலை 9:30 (9 . 30 AM) | காரிக்கிழமை | நினைவரங்கம், சென்னை | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு.

May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

 

Pin It