டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பார்ப்பன குள்ளநரிக் கூட்டத்தைச் சேர்ந்த பலர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றார்கள்.

குறிப்பாக ரஞ்சனி, காயத்ரி என்ற இரண்டு பாப்பாத்திகள் (இருவரும் சகோதரிகள்) வெளிப்படையாக அறிக்கைவிட்டு தங்களது பார்ப்பன நஞ்சைக் கக்கி இருக்கின்றார்கள்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய இசை விற்பன்னர்களை அவமதித்துள்ளார்.

இசையில் இருக்கும் ஆன்மீக உணர்வை அவர் தொடர்ந்து இழிவுபடுத்தியுள்ளார். பெரியார் போன்ற ஒருவரை அவர் புகழ்ந்து பேசியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் அப்படி பேசியிருப்பது மிகவும் ஆபத்தானது" என்றும்,tm krishna ranjani and gayatri"பெரியார் பிராமணர்களைக் கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உரக்கப் பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளைக் கொண்டு பேசியவர். ஆபாசமாகப் பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர்" எனவும் விமர்சித்து இருக்கின்றார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார்கள். இவர்களது கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஆதரவு கொடுத்து இருக்கின்றார்.

சகோதரப் பாப்பாத்திகளின் அறிக்கையை ஊன்றிக் கவனித்தால் அவர்களுக்கு டி.எம்.கிருஷ்ணா மீது இருக்கும் வெறுப்பைவிட, பெரியார் மீது இருக்கும் வெறுப்பே முதன்மையானது என்பது புலப்படும். (இந்த பாப்பாத்திகள் வைத்திருப்பது ஆதாரமற்ற அயோக்கியத்தனமான பொய்க் குற்றச்சாட்டு என்பதால் அதைப் பற்றி தனியாக விளக்க விரும்பவில்லை)

டி.எம்.கிருஷ்ணா ஒருவேளை பெரியாரைப் புகழ்ந்து பாடாமல் இருந்திருந்தால், சகோதரப் பாப்பாத்திகள் இவ்வளவு எதிர்ப்பைக் காட்டியிருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அவருக்கு சங்கீத கலாநிதி விருது கொடுக்கும் சென்னை மியூசிக் அகாடமி ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன நிறுவனமாகும். அதன் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அனைவருமே பார்ப்பனர்கள் ஆவார்கள்.

பார்ப்பனர்கள் மட்டுமே நடத்தும் சென்னை மியூசிக் அகாடமியின் விருதை தன்னை எளிய மக்களின் இசைக் கலைஞனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் டி.எம்.கிருஷ்ணா வாங்கிக் கொள்வாரா என்பது நமக்குத் தெரியவில்லை.

அது ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கும் போதே கார்நாடக இசையைப் புனிதமானது, அது கர்ப்பகிரகத்தைப் போன்றது என்றெல்லாம் பிறப்பின் அடிப்படையில் தனக்கு சிறப்புரிமை உள்ளது எனப் பிதற்றித் திரியும் தமிழினத் துரோகிகள் இட்டுக்கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இசையை வைத்து பொறுக்கித் தின்பதற்காக நெஞ்சறிந்து பொய்யுரைக்கின்றார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.

"கர்நாடக இசை எங்களுடையது, கர்நாடக இசை எங்களுடையது" என்று பார்ப்பனக் கும்பல் கூப்பாடு போடுகின்றதே... அது உண்மைதானா என்று பார்த்தோம் என்றால் இவர்களின் திருட்டுத்தனம் அம்பலமாகும்.

தமிழ் மக்கள் வழிபட்ட முருகனை பார்ப்பன ஸ்கந்தனுடன் இணைத்து அவனுக்கு அப்பன் சிவபெருமாள், அம்மா பார்வதி, அவனுக்கு தெய்வானை என்ற பார்ப்பன மனைவி இருந்தாள் என்று சொல்லி அவனுக்கு பூணூல் போட்டார்கள். ஆட்டு ரத்தத்தில் தினைமாவைக் கலந்து சுவைத்த நான்வெஜ் முருகனை எப்படி புளியோதரையும் பொங்கச் சோறும் தின்னும் தயிர் சோறு முருகனாக மாற்றினார்களோ, அதே போல தமிழ்மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வந்த தமிழ் இசையைத் திருடி அதை சமஸ்கிருத வார்த்தைகளில் எழுதி கர்நாடக இசை என பெயர் மாற்றிக் கொண்டார்கள்.

தமிழில் பழமையான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலேயே இசை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்நூல்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட நூல்களாகும்.

இவை மட்டுமல்லாமல் சிகண்டி முனிவரால் எழுதப்பட்ட இசை நுணுக்கம் என்னும் நூல், யாமளேந்திரர் என்பவரால் எழுதப்பட்ட இந்திர காளியம், தேவவிருடி நாரதன் என்பவரால் எழுதப்பட்ட பஞ்சபாரதீயம், அறிவனார் எழுதிய பஞ்சமரபு போன்ற இசை நூல்களும் பெருங்குருகு, பெருநாரை போன்ற இசை நூல்களும் அழிந்து விட்டதாக ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் சூத்திரம் தமிழர்களின் பாண்பாட்டு கருப்பொருளை குறிப்பிடுகின்றது.

தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப (தொல். அகத்திணையியல் - 18)

இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறையாகும்.

பழந்தமிழ் மக்கள் இயற்கையோடு இணைந்து தாம் வாழ்ந்த நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்டார்கள். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடத்தை முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடத்தை நெய்தல் என்றும், குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் திரிந்து உண்டாகும் பகுதியை பாலை என்றும் அழைத்தனர்.

மேலும் ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் அதற்குரிய பண்களையும் இசைக்கருவிகளையும் உருவாக்கிக் கொண்டனர்.

நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர், அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். அந்தந்த நிலத்திற்குரிய பண்களையும், இசைக்கருவிகளையும் கீழ்க்கண்டவாறு அமைத்துக் கொண்டனர்.

குறிஞ்சிக்கு குறிஞ்சிப்பண், குறிஞ்சி யாழ், வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை, முல்லைக்கு முல்லைப்பண், முல்லையாழ், ஏறுகோட்பறை, மருதத்திற்கு மருதப்பண், மருத யாழ், நெல்லரி மணமுழவு, நெய்தலுக்கு செவ்வழிப் பண், விளரி யாழ், மீன் கோட் பறை, பாலைக்கு பாலைப்பண், பாலை யாழ், துடி என அமைத்துக் கொண்டார்கள்.

உலகில் வேறு எந்த மொழிக்காவது இந்த வரலாற்றுச் சிறப்பு இருக்குமா என்று தெரியவில்லை. அப்படி உயர்ந்த நாகரிகமும், பண்பாடும் இருந்த இந்த மண்ணில் மக்களின் குருதியில் கலந்த இசையைத்தான் பார்ப்பனக் கும்பல் கபளீகரம் செய்து இன்று எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று எண்ணி ஆகாசப்புளுகு புளுகிக் கொண்டு இருக்கின்றது.

வார்த்தைகளை மாற்றி விட்டால் அது கர்நாடக இசை ஆகிவிடுமா? பார்ப்பனக் கூட்டத்தால் இப்படி ஒரு வரலாறு தனக்கும் இருக்கின்றது என காட்ட முடியுமா?

தமிழ் இசையை எவ்வளவு சாதுர்யமாகத் திருடி இருக்கின்றார்கள் என்று நீங்களே பாருங்கள்

1. பண் – இராகம், 2. தாளம் – தாளம், 3. பதம் – ஸ்வரம், 4. பதம் ஏழு - ஸ்வரம் ஏழு, 5. ஆரோசை – ஆரோகணம், 6. அமரோசை - அவரோகணம் 7. குரல் - ஸ (ஸட்ஜமம்), 8. துத்தம் - ரி (ரிஷபம்), 9. கைக்கிளை - க (காந்தாரம்), 10 உழை - ம (மத்யமம்), 11. இளி - ப (பஞ்சமம்), 12. விளரி - த (தைவதம்), 13. தாரம் - நி (நிஷாதம்)

தமிழிசை வழக்குகளில் இருந்து தான் கர்நாடக இசை வழக்குகள் உருவாயின என்பதை இதன் மூலம் எளிதில் மெய்ப்பித்து விடலாம்.

இப்படி இசைப்பணி செய்தவர்களுக்கு மிகப் பெரும் மரியாதை சமூகத்தில் இருந்தது. மாங்குடி கிழார் என்பவர் புறநானூற்று 335 ஆம் பாடலில் இவ்வாறு கூறுகிறார்.

“துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியு மில்லை” என்று.

‘துடி’ என்னும் தோற்கருவியை இசைப்போர் துடியர், ‘பண்’ என்னும் இனிய இசை பாடுவோர் பாணர், ‘பறை’ என்னும் தோற்கருவியை இசைப்போர் பறையர், முருக வழிபாட்டில் ஈடுபட்ட இசை வகுப்பினர் கடம்பர் (கடம்பன் என்பது முருகனைக் குறிக்கும்).

இவை தவிர கூத்து ஆடியோர்கள் கூத்தர் என்றும், கருவி இசைத்தோர் யாழ்ப்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர்.

தமிழிசைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு இருப்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். மேலும் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழசை மேலும் வளப்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழிசை மூவர் என்றும், சீர்காழி மூவர் என்றும் போற்றப்படும் இசைமேதைகள் முத்துத்தாண்டவர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர் ஆகிய மூவரும் தான் கீர்த்தனை என்ற புதிய தமிழிசை வடிவத்தை உருவாக்கினர்கள். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் முத்துத் தாண்டவர் தொடங்கி 18-ஆம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயர் வரை தமிழ்க் கீர்த்தனைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர்கள் ஆவார்கள்.

ஆனால் தமிழசையைத் திருடி அதை பார்ப்பன மயப்படுத்திய தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரையும் 20ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுச்சி பெற்ற பார்ப்பன சக்திகள் இசை மும்மூர்த்திகள் என்று அழைத்தனர்.

ஆனால் தமிழிசை மூவர்களோ, ‘கர்நாடக’ இசை மூவர்களோ அனைவருமே மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட பிற்போக்குத்தனமான பக்திப் பாடல்களை மட்டுமே பெரும்பாலும் தனது கருப்பொருளாகக் கொண்டிருந்தனர்.

இன்றும் தமிழிசை தாரை தப்பட்டை என முழங்கிக் கொண்டு இருக்க, கர்நாடக இசையோ கோயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுக்கவும் சபாக்களில் ஊளையிடவும் மட்டுமே பயன்பட்டு வருகின்றது.

மேலும் தமிழ் மண்ணில் ஆதிகாலம் தொட்டு இன்றுவரை வழங்கிவரும் நாட்டுப்புற இசை போன்றவை கர்நாடக ஊளைக் கோஷ்டி கும்பலுக்கு எப்போதுமே அகப்படாத ஒன்றாகும்.

பிறப்பு முதல் இறப்புவரை தமிழனின் குருதியோடு கலந்தது இசையாகும். ஆனால் பார்ப்பனக் கூட்டத்திற்கு அது ஒரு புனிதப் புண்ணாக்காகும். அது தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என சொல்வதன் மூலம் இந்த திருட்டுக் கும்பல் தாங்கள் தமிழர்கள் இல்லை என தங்களையே அம்பலப்படுத்திக் கொள்கின்றது.

இவர்கள் தமிழசையை மட்டும் திருடவில்லை; பண்ணிசையோடு இணைந்து வளம் பெற்ற பழந்தமிழர் ஆடல்முறையையும் திருடி அதை "பரத நாட்டியம்" என்று மாற்றிக் கொண்டார்கள்.

சினிமாவின் வளர்ச்சியும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும் 20ஆம் நூற்றாண்டில் உடைந்து கொண்டிருந்த பார்ப்பனியமும்தான் இன்று தமிழிசையை பெரும்பாலான சாமானிய மக்களுக்கானதாக மாற்றி இருக்கின்றது.

இன்று இசைத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் இளையராஜா, ரஹ்மான், தேவா போன்றவர்கள் பார்ப்பனர்கள் கிடையாது என்பதும், இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இன்று கொட்டமடிக்கும், தங்களைப் பெரிய இசை மேதைகள் என பிதற்றித் திரியும் பார்ப்பனக் கூட்டம் கோயில்களில் பாட்டுப் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் என்பதும்தான் வரலாறு.

இன்று அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றார்கள். அதில் கலந்து கொள்ளும் பெரும்பாலான இளைஞர்கள் யாரும் ஆதிக்க சாதிப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் அவர்களில் பெரும்பாலாலோனோர் முறையாக சங்கீதம் கற்றவர்கள் கூட கிடையாது. எம்எஸ்வியும், இளையராஜாவும், ரகுமானும், தேவாவும் அவர்களை எல்லாம் சங்கீதம் கற்காமலேயே சிறந்த பாடகர்களாக உருவாக்கி இருக்கின்றார்கள்.

கர்நாடக சங்கீதக் கபோதிகள் செய்ய முடியாததை இவர்களின் இசை செய்திருக்கின்றது. எனவே மடிசார் மாமிகளும், பஞ்சகச்ச மாமாக்களும் புனிதம், கர்ப்பக் கிரகம் என அனத்தாமல் இருக்க வேண்டும்.

- செ.கார்கி

Pin It